இத்திட்டமானது இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் 3சுகளை ஊக்குவிக்கும் என்பதுடன், மீள்சூழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்பில் உள்ளூர் மற்றும் பிராந்திய சந்தைகளை பலப்படுத்தும். அத்துடன், சிறந்த கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி பழக்கங்களை கடைபிடிக்க மக்களையும் ஊக்குவிக்கும். CCBO ஆனது திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி முறைமைகளின் வினைத்திறனான நிர்வாகத்தை அதிகரிக்கும் என்பதுடன், தனியார்-அரச பங்காண்மைக்கும் உதவியளிக்கும்.
சமுத்திரம் மற்றும் ஏனைய நீர் வளங்களுக்கு பிளாஸ்டிக் சென்றடைவது ஆபத்தான மட்டங்களை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் சுற்றாடல் வளங்களைப் பாதுகாக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு அமெரிக்கா பங்களிப்பு செய்துகொண்டிருக்கிறது,' என்று USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ரீட் எஸ்லிமென் தெரிவித்தார். தனியார் துறையின் ஈடுபாடு, வாழ்வாதார வாய்ப்புகள், சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி, பெண்கள் மற்றும் இளைஞர் வலுவூட்டல், நிலைபேறான நகரமயமாக்கல், கடல் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மீன்வளம், அனர்த்த ஆபத்து குறைப்பின் ஊடாக மீளெழுச்சி என்பன பற்றியும் CCBO இன் செயற்பாடுகள் கவனம் செலுத்தும்.
கடல் பிளாஸ்டிக் கழிவு மாசடைதலுக்கான நிலம் சார்ந்த ஆதாரங்களை குறைக்க இலங்கைக்கு உதவும் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அமெரிக்க அரசாங்கத்தின் முன்னெடுப்பொன்றான மாநாகர கழிவு மீள்சுழற்சி திட்டத்தின் (Municipal Waste Recycling Program - MWRP) கீழ் பணியாற்றும் பல்வேறு பங்காளர்களின் ஒன்றுகூடலுடன் கொழும்பில் நடைபெற்ற செயலமர்வொன்றின் போதே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மத்திய மற்றும் உள்ளூராட்சி நிர்வாகங்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நெருக்கமான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்ந்ததுடன், இந்த நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு எப்படி சிறந்த ஒத்துழைப்பை வழங்க முடியும் என்பது பற்றிய பின்னூட்டங்களையும் வழங்கினர். மாநகர கழிவு மீள்சுழற்சி திட்டம் மற்றும் CCBO பற்றி மேலும் அறிந்து கொள்ள பின்வரும் இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்கவும்: https://urban-links.org/ocean-plastics/.