அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற குறித்த போட்டியில் கிழக்கு மாகாணத்திலிருந்து என்னால் பயிற்சி வழங்கப்படுகின்ற IMA மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றி நான்கு தங்கம், நான்கு வெள்ளி, பத்து வெண்கலம் என மொத்தமாக 18 பதக்கங்களை பெற்றுள்ளார்கள்.
இதில் காத்தா நிகழ்ச்சியில் என்.எம். உமைர் தங்கமும், அர்ஜிஸ், பர்சான் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களும், இன்சாத் அப்துல்லாஹ், சஹ்மி, வஜீஸ் சஹி, ரஹ்மான் ஆகியோர் வெண்கல பதக்கங்களும் பெற்றார்கள்.
அதேபோல் குமிதே நிகழ்ச்சியில் இன்ஸாத் அப்துல்லாஹ், ரஹ்மான், ரத்நாயக்க ஆகியோர் தங்கப் பதக்கங்களும், வஜீஸ் சஹி, பர்சான் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களும், ஹசனத் கான், ஓமர் செய்யாப், சஹ்மி, உமைர், முஹம்மெத், அஸ்பாக் அஹமத் ஆகியோர் வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளார்கள்.