மீராசாஹிப் மகளிர் நலம்புரி அமைப்பின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு நீர், மின் இணைப்பு வழங்கி வைப்பு
மீராசாஹிப் மகளிர் நலம்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது , மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள குடும்பங்களுக்கு நீர், மின் இணைப்பு மற்றும் சுமார் 500 குடும்பங்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (18) முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் இல்லத்தில் இடம் பெற்றது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, பயனாளிகளுக்கு சிராஸ் மீராசாஹிப் மற்றும் அவரது தாயாரும் இணைந்து மின், நீர் இணைப்பு பத்திரம் மற்றும் அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைப்பதையும் கலந்து கொண்ட பயனாளிகளையும் காணலாம். (படங்கள் - எஸ்.அஷ்ரப்கான்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...