பின்னடைவுகளுக்குப் பிரதான காரணம் மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமையே


கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்

மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமையே நல்லாட்சி அரசு பின்னடைவை சந்திக்க பிரதான காரணமாகியது. இன்று மாகாணங்கள் அனைத்திலும் ஆளுநர்கள் ஆட்சி தொடர்வதற்கும் இதுவே வழிகோலியது. இது மட்டுமின்றி மாகாண ஆட்சி முறைமை அவசியமில்லை என்ற கருத்தோட்டம் எழுவதற்கும் தற்போது வித்திட்டுள்ளது. இந்த நிலைமை ஏற்பட நல்லாட்சி அரசுக்கு கைகளை தூக்கி ஆதரவு தெரிவித்தவர்களே பொறுப்புக் கூறவேண்டும் எனத் கடுந்தொனியில் தெரிவிக்கின்றார். கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்.

இது குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் என்றே மாகாணசபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகையில் மாகாண ஆட்சி மக்கள் பிரதிநிதிகளால் நடத்தி செல்லப்படும்போதே அதன் பலாபலன்கள் மக்களுக்கு உரிய முறையில் கிடைக்கும். இதனை செவ்வனே வழிநடத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசிடமே காணப்படுகிறது.

இந்நிலையில், மாகாண சபைகளின் ஆட்சிகாலம் முடிந்ததும் அவற்றுக்கான தேர்தலை உரியமுறையில் நடத்தவேண்டிய மத்திய அரசு அதனை நடத்தாமல் தள்ளிப் போட்டமை மக்களின் ஜனநாயக உரிமையை பாதிக்கும் செயலாகவே கருதப்பட்டது. கட்சி அரசியலை கருத்தில் கொண்டு இதனை தள்ளிப் போடுவ தற்கு முனைந்த கடந்த கால ஆட்சிக்கு கை தூக்கி ஆதரவளித்தவர்கள் இந்த தவறுக்கு இப்போது பதில் சொல்லியாக வேண்டும்.

கடந்த காலஅரசு உரிய காலத்தில் இந்தத் தேர்தலை நடத்தியிருக்குமாயின் அதன் மக்கள் செல்வாக்கு அந்த அரசுக்கு எந்தளவுக்கு இருக்கின்றது என்பதை நாடிபிடித்து பார்த்திருக்க முடியும். அதனைக் கொண்டு தவறுகளை சரிசெய்து உரிய முறையில் பயணித்திருக்கவும் முடியும் ஆனால் அதனைச் செய்யவில்லை.

இதேவேளை, இந்த தேர்தல்களை தள்ளிப்போட மேற்கொண்ட முயற்சிகளுக்கு அந்த அரசுக்கு நேரடி ஆதரவு வழங்கிய கட்சிகளும் மறைமுக ஆதரவு வழங் கிய கட்சிகளும் துணை போனமையை நாம் மறந்து விட முடியாது. குறிப்பாக சிறுபான்மை மக்களை பிரதிபலிக்கும் கட்சிகள் இதனை எக்காரணம் கொண்டு ஏற்றிருக்ககூடாது ஆனாலும் அவை துணை போனமை இன்று பாரிய பிரச்சினை எழுவதற்கு வகை செய்துள்ளன.

இன்று ஆளுநர்கள் கைகளில் உள்ள மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரம் இனி எப்போது மக்கள் பிரதிநிதிகளின் கைகளுக்கு வரும் என்ற கேள்விம் எழுந் துள்ளது. இதற்கான அழுத்தங்களை கொடுத்து மாகாண சபை முறைமையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தற்போது நம்வசம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு செயற்பட சிறுபான்மை சமூகங்கள் முன் வரவேண்டும் - என்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -