கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் பனங்காடு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் பௌதீக வளப்பற்றக்குறை தொடர்பாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச மக்களை வெள்ளிக்கிழமை(20) மாலை சந்தித்த பின்னர் குறித்த நிலையத்திற்கு மக்களின் வேண்டுகோளை ஏற்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது பராமரிப்பு நிலையத்தின் பௌதீக பற்றாக்குறை அதன் இயங்கு நிலை மற்றும் செயற்பாடு குறித்து மக்களிடம் கேட்டறிந்ததுடன் சுகாதார அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக தொடர்பினை மேற்கொண்டு உடனடி தீர்வை பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த நிலையத்தின சூழல் பற்றைக்காடாக காட்சி அளிப்பதனை கண்ணுற்ற அவர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அம்பாறை மாவட்ட தலைவர் சுதாவிடம் இளைஞர்களை அழைத்து சிரமதானம் ஒன்றை செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இவ்விஜயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி அம்பாறை மாவட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.