குடியிருப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: யானைகளை விரட்டும் களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி.

எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் நாவலடி, பாலை நகர், றஹ்மத் நகர் ஆகிய கிராமங்களுக்குள் திங்கட்கிழமை (16) இரவு திடீரென புகுந்த யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் சிலர் வீடுகளை விட்டு பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

குறித்த பகுதிகளில் மூன்று யானைகள் உள்நுழைந்து பயிர்களையும், பொருட்களையும் சேதப்படுத்தியதை அவதானித்தவர்கள் பிரதேச சபை தவிசாளருக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் தவிசாளர் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளை சம்பவம் நடந்த இடத்திற்கு வரவழைத்து பெண்களையும், சிறுவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றதோடு யானைகளை விரட்டும் முயற்ச்சிகளில் ஈடுபட்டனர்.

மிக நீண்ட போராட்டத்துக்கு மத்தியில் குறித்த அதிகாரிகளுடன் பிரதேச இளைஞர்களும், பிரதேச மக்களும் இணைந்து யானைகளை மக்களின் குடியிருப்பு பகுதிகளை விட்டு யானைகள் காணப்படுகின்ற காரமுனை காட்டை நோக்கி வெடி கொளுத்தி விரட்டி அனுப்பப்பட்டன.

குறித்த பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு விரைந்து செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்.எம்.தெளபீக், பிரதேசசபை உறுப்பினர் அஸீஸுர் றஹீம் மற்றும் பிரதேச சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர், தியாவட்டவான் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் ஐ.எம்.ரிஸ்வான் உட்பட களத்தில் நின்று செயற்பட்ட அனைவருக்கும் பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

எதிகாலத்தில் மக்கள் குடியிருப்புக்குள் யானைகள் வராமலிருக்க யானை வேலிகளை அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி இதன்போது தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -