உரக்களஞ்சியசாலையில் இயங்கிவரும் தொழில் பயிற்சி கல்வி நிலையத்தினால் மாணவர்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.



ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
மது நாட்டில் சமமான கல்வி சமமான வாய்ப்பு ஒன்று சட்டத்திட்டங்கள் வகுப்பட்டு இருந்த போதிலும் 21 வது நூற்றாண்டாகியும் இன்னும் பல பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் அடிப்படை வசதிகள் கூட இன்றியே தமது கல்வியினை பெரும் சிரமத்திற்கு மத்தியில் தொடர் வேண்டிய துர்பாக்கிய நிலை பல பிரதேசங்களில் காணக்கூடியதாக உள்ளன.
மலையகத்தினை பொறுத்தவரையில் தமது பொருளாதார நிலை காரணமாக உயர்கல்வியினை தொடர முடியாத மாணவர்கள் தமது குடும்பங்களின் வறுமை நிலையினை கருத்தில் தமது கல்வியினை இடை நடுவே நிறுத்திவிட்டு தொழில் கல்வியினை கற்று தமக்கென ஒரு தனியான சுயதொழிலினை ஆரம்பித்து, தமது குடுமபங்களை உயர்த்த வேண்டும். என்ற கனவோடு தொழில் கல்வியினை தொடர வேண்டும். என்ற எண்ணத்தோடு இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கும் நிலையங்களுக்கு செல்கின்றனர்.
ஆனால் அவற்றில் போதியளவு அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாக, மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறு போதியளவு வசதிகள் இன்றி, இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபைக்;கு சொந்தமான நோர்வூட் நிவ்வெலி பகுதியில் உரக்களஞ்சியசாலையில் இயங்கிவரும் தொழிற்பயிற்சி கல்லூரி தொடர்பாக சுட்டிக்காட்ட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள மலையக தோட்டத்தொழிலாளர்கள் அத்துறை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் தமது பொருளாதார நிலைமை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில் வயிற்றுப்பசியினை கூட போக்கிக்கொள்ள முடியாது. திண்டாடும் இவர்கள் எவ்வாறு தமது பி;ள்ளைகளின் கல்வியினை மேம்படுத்துவது இந்நிலையில் பாடசாலைகளில் இடைவெலகல் தொகை நாளாந்தம் நவரெலியா மாவட்டத்திலேயே அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறு இடைவிலகுபவர்களுக்கு காணப்படும் தமிழ் மொழிமூல ஒரேயொரு பயிற்சி நிலையமாக இயங்கிவருவது.நிவ்வெலி தொழிற்பயிற்சி நிலையமாகும்.
இந்நிலையத்திற்கு நுவரெலியா மவாட்டத்தில் உள்ள பொகவந்தலா,மஸ்கெலியா,தலவாக்கலை,நானுஓயா,கினகத்தேனை,ஹட்டன்,கொட்டகலை,தலவாக்கலை,உள்ளிட்ட பல தூர பிரதேசங்களிலிந்து மாணவர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையம் 1995 பெப்ரவரி, 11 ம் திகதி தற்போதய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தொழில் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பொகவந்தலா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான காணியில் நிவ்வெலி பகுதியில் செயலிழந்து கிடைந்த தேயிலை தொழிற்சாலை ஒனறில் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 21 வருடங்கள் கழிந்த நிலையிலும் எவ்வித மாற்றமும் இன்று எவ்வித வசதிகளுகம் இன்றி எத்தனையோ அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தும் எவ்வித நல்ல மாற்றங்களும் ஏற்படாது. இருப்பது தோட்டத்தொழிலாளர் கல்வி பயிலும் ஒரு நிறுவனம் என்பதாலேயா? என்ற சந்தேகம் ஏற்படுத்தியுள்ளதாக இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கல்வி நிலையத்தில் வருடம் தோறும் சுமார் 150 மேற்பட்ட மாணவர்கள் தொழில் கல்வியினை பயின்று வருவதாகவும் இவர்கள் கணணி,தையல்,தச்சு வேலை,வெல்டிங்,உடை வடிவமைப்பு,உள்ளிட்ட பாடநெறிகளை மாணவர்கள் பயிலுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றுள்ள பொருளாதார நிலை காணரமாக இந்த தொகை மேலும் மேலும் பல மடங்குகளாக அதிகரிக்கவே போகின்றன.
இந்நிலையில் இந்த நிலையத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன,அதில் பிரதானமாக குறித்த கல்வி நிலையத்திற்கு கீழ் பகுதியில் உரக்கயஞ்சியசாலையில் இயங்கி வருவதனால் இதிலும் வெளியாகும். மணம் காரணமாக பல்வேறு தோல் நோய்களுக்கு மாணவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.இதனால் அடிக்கடி வாந்தி அரிப்பு காணரமாக மாணவர்கள் அவதிப்பட்டு கொண்டு தான் தமது கல்வியினை தொடர் வேண்டிய துர்பாக்கிய நிலை தோன்றியுள்ளன.
குறித்த தொழிற்பயிற்சி நிலையத்தில் மயக்கம் வாந்தி வயற்றுலைவு காரணமாக பல தடைவைகள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் மாணவர்களை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதே.
தேயிலை தோட்டத்திற்கு தேவையான ஆயிரக்கணக்கான உரப்பொதிகளை இவ்விடத்தில் களஞ்சிய படுத்துவதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்தோடு அடிக்கடி உரம் ஏற்றிச்செல்வதற்கு வாகனங்கள் வந்து செல்வதனால் மாணவர்களின் கற்றல் நிலையும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
அத்தோடு இந்த பயிற்சி நிலையத்திற்கு குடிநீர் தோட்டப்பகுதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுவதனால் அடிக்கடி குடிநீர் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இதனால் குடிப்பதற்கும் கழிவறை செல்வதற்கும் போதியளவு நீர் இல்லாததன் காரணமாக மாணவர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதனை தவிர போதியளவு கழிவறை வசதிகள் மற்றும் ஓய்வறைகள்,போன்றன இல்லாத நிலையிலேயே இயங்கி வருகின்றனர்.
இதனால் பெண் மாணவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் பல சிரமஙகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
நவீன வசதிகளுடன் ஒருசாரர் கல்வி கற்கும் காலகட்டத்தில் தாங்கள் மாத்திரம் பிறந்தது முதல் துன்ப நிலையிலேயே அனைத்தையும் செய்ய வேண்டுமா? என்று இந்த மாணவர்கள் எமது அரசியல் தலைவர்களிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் நாட்டின் எதிர்கால தேவையினை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு இந்த மாணவர்கள் பாடநெறிகளை சிறந்த முறையில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -