பெரியார் பல்கலைக் கழகத்தின் அனுமதி பெற்ற கல்லூரியான கே.எஸ்.ஆர் கலை விஞ்ஞான பெண்கள் கல்லூரி ஆண்டுதோறும் நடாத்தும் இலத்திரனியல் நுட்ப அபிவிருத்தியும் பயன்பாடும் எனும் தலைப்பிலான சர்வதேச மாநாட்டிற்கு நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருப்பதுடன் சிறப்பு சொற்பொழிவும் நிகழ்த்த உள்ளார்.
கலைத்துறையுடன் விஞ்ஞானமும் இணைந்ததாக கணிணி நுடபங்களுடனான மொழியுபயோகம் தொடர்பாக ஆராயும் இந்த மாநாட்டில் பல ஆய்வறிஞர்கள் கட்டுரைகள் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு "மொழியும் சமூக தொடர்பாடலும்" எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவுவையும் பாராளுமன்ற உறுப்பினர் திலகர் ஆற்றவுள்ளார்.
12/12/2019 அன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள மேற்படி கல்லூரியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த எட்டாம் திகதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை அரங்கில் திலகர் எம்பியின் அரசியல் சமூக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான "மலைகளை பேசவிடுங்கள்" எனும் நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -