ஏ.எம்.சாகுல் ஹமீத் அவர்களுக்கு அனுதாபம்


முன்னாள் கல்முனை பிரதேச சபைத் தவிசாளர் பள்ளிக்காக்கா என செல்லமாக அழைக்கப்படும் ஏ.எம்.சாகுல் ஹமீத் அவர்களின் மரணச் செய்தி கேட்டு நான் மிகவும் கவலையடைகின்றேன். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினதும், கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பினதும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் பள்ளிக்காக்கா அவர்கள் கடந்த காலங்களில் முன்னாள் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களுடன் இணைந்து கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அது மாத்திரமல்லாமல் தனக்கு வழங்கிய தவிசாளர் பதவியினைக் கொண்டு கல்முனை பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து ஊர்களுக்கும் சிறந்த சேவையினை திறன்பட செய்தவர்.இவரின் மரணம் கட்சிக்கும் நமது சமூகத்திற்கும் ஒரு பாரிய இழப்பாகும்.அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் மனைவி, மக்கள் மற்றும் குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதுடன் எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை பரிசாக வழங்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்கின்றேன் ஆமீன்

ஏ.சி.எஹியாகான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
உயர்பீட உறுப்பினர்
அம்பாறை மாவட்ட பொருளாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -