தற்பொழுது பெய்து வரும் தொடர்ச்சியான மழையால் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் இப்பகுதி மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பாரிய சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர். ஆனால் இதுவரை இந்த மக்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரமதாசவே பிரதமர் வேட்பாளர் எனஅண்மையில் நான் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடும் போது தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்த வாக்குகளை வைத்து பார்க்கும் போது எமக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 104தொடக்கம் 106 ஆசனங்களை பெறமுடியும்.
கட்சி என்ற ரீதியில் ஒற்றுமையாக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தி சிறந்த முறையில் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் போது எம்மால் 113 க்கு மேற்பட்ட ஆசனங்களை பெற முடியும். அதனை பெறுவதுக்கு எமக்கு தேவைப்படுவது ஜனாதிபதி தேர்தலில் பெற்றதை விட மேலதிக ஏழு இலட்சம் வாக்குகளே என தெரிவித்தார்.