மீன்கொள்வனவுக்காக சென்று கொண்டிருந்த பன்னிரெண்டு மீன் வியாபாரிகளை இடைமறித்து அவர்களிடம் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகல்லாறு பிரதான இன்று(8) ஞாயிறு அதிகாலை 3.45 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் இதன் போது சுமார் ஒரு இலட்சத்தி எழுபத்தேழாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
மேற்படி கொள்ளைச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
வியாபாரத்தின் பொருட்டு மீன் கொள்வனவுக்காக மாளிகைக்காட்டுக்கு சொன்று கொண்டிருந்த மீன் வியாபாரிகளை பெரியகல்லாறு பிரதானவீதியில் வைத்து வழிமறித்த இருவரே மேற்படி கொள்ளைச்சம்பத்தை நிகழ்தியுள்ளதாக அறியமடிகின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பாக மீன் வியாபாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்
நான் வழமைபோன்று அதிகாலை எங்களது வீடுகளில் இருந்து புறப்பட்டு மீன் கொள்வனவுக்காக மாளியக்காட்டை நோக்கி சென்று கொண்டிருந்தேன். பொரியகல்லாற்று பிரதான வீதியில் இருந்து என்னை நோக்கி ரோச் வெளிச்சம் ஒன்று வந்தது நான் பொலிசார் என்ற கோதாவில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். முன்னால் வந்தவர்களும் தங்களது மோட்டார்சைக்கிள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தியவுடன் ஒருவர் கத்தியை எடுத்தார் நான் பயந்து விட்டேன். இதன் பின்னர் என்னிடம் இருந்த பணத்தினை பறித்துவிட்டனர். இதேபோன்று இன்னொருவர் பின்வந்தவர்களை நிறுத்தி தலைமீது துப்பாக்கியை வைத்தனர் அதன் பின்னர் தொடர்;ச்சியாக வந்த பன்னிரெண்டு வியாபாரிகளிடம் இருந்த அனைத்து பணத்தினையும் பறிது சென்று விட்டனர். நாங்கள் இதன் பின்னர் பொலிஸ் நிலையம் வந்து எமது முறைப்பாட்டி செய்துள்ளோம் .
மிகவும் பின்தங்கிய கிராமங்களான எருவில் களுதாவளை மகிழூர் போரதீவு திக்கோடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இக் கொள்ளைச்சம்பவத்தை நிகழ்திய கொள்ளையர்கள் செய்வதறியாது கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியையும் கொள்ளையிட்ட ஒரு தொகை பணத்தினையும் கைவிட்டு சென்றுள்ளனர். இதனை களுவாஞ்சிகுடி பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக களுவாஞ்சிகுடி பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர். தெரிவித்தார்...