கட்டார் நாட்டில் இடம்பெறும் 19ஆவது “டோஹா போரம்” சர்வதேச மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் (எம்.பி) பங்கேற்கின்றார்.
இந்த மாநாடு “பல்முனை உலகளாவிய சமூகத்தில், புத்துயிர் பெரும் ஆட்சி” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுவருகிறது.
கட்டார் நாட்டின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே, அவர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார். இம் மாநாட்டை கட்டார் மன்னர் சேக் தமீம் ஆரம்பித்து வைத்தார்.
உலகின் பல நாடுகளிலுமிருந்து அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
நேற்று 14ஆம் திகதி இந்த மாநாடு ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது.
--