காரைதீவைச்சேர்ந்த சிரேஸ்ட தொழினுட்ப உத்தியோகத்தரான வெற்றிவேல் வேற்குமரன் அகிலஇலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கல்முனை மாவட்ட நீதிபதி அப்துல்பயாஸ் றசாக் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் காலஞ்சென்ற காரைதீவு மத்தியஸ்தசபைத்தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான சண்முகம் வெற்றிவேலின் புத்திரராவார்.
காரைதீவு இ.கி.மி.ஆண்கள் பாடசாலை மற்றும் விபுலாநந்தா மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற இவர் விளையாட்டக்கழகம் சமுகநலன்புரி நிறுவனங்களின் உறுப்பினராகவும் பொதுச்சேவையாற்றிவருகிறார்.
வீதி அபிவிருத்திதிணைக்கள தொழினுட்ப உத்தியோகத்தரான இவர் கிளிநொச்சி துணுக்காய் வவுனியா கல்முனை போன்ற பிரதேசங்களில் பணியாற்றியவராவார்.
ஏலவே மாவட்ட சமாதான நீதவானாக பலவருடாகாலம் பணியாற்றிவந்தவேளையில்தற்போது அகிலஇலங்கை சமாதானநீதவானாக தரமுயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.