தொடர்ந்தும் மூன்றாவது வருடமாக அல்ஹாஜ் ஜுமான் அவர்களது அனுசரணையில் கஹட்டோவிட்ட, உடுகொட, குரவலான பிரதேசங்களைச் சேர்ந்த வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றது.
MLSC நிர்வாக உறுப்பினர் அல்ஹாஜ் பயாஸ் அவர்களது தலைமையில் நடைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம், குரவலான கனிஷ்ட (சிங்கள) பாடசாலை, உடுகொட அறபா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 33 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பிரதம அதிதியாக அனுசரணையாளர் ஜுமான் மற்றும் ஏனைய அதிதிகளாக கலாநிதி நபீஸ், கஹட்டோவிட்ட பத்ரியா அதிபர் பர்ஸான், உடுகொட அறபா அதிபர் அலீம், கஹட்டோவிட்ட முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் நஜீம், பாதிபிய்யா தக்கியா தலைவர் மௌலவி இஜ்லான், பத்ரியா ஆசிரியர் ரம்ஸி அலி, கஹட்டோவிட்ட 369 கிராம சேவகர், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் புலத்சிங்ஹல உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வினை MLSC நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான சகோதரர் கியாஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
அடுத்த வருடமும் அல்ஹாஜ் ஜுமான் அவர்கள் இன, மத பேதமின்றி சுமார் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்க எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடமும் அல்ஹாஜ் ஜுமான் அவர்கள் இன, மத பேதமின்றி சுமார் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்க எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.