ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் அலுகம பகுதியில் இன்று (12) காலை 9.20 மணியளவில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து காரணமாக ஹட்டன் டிக்கோயா உடனான பொது போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தாமதமாகியன.
டிக்கோயா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஹட்டன் நோக்கி வருகை தந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸினை முந்தி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த முச்சக்கரவண்டி பஸ்ஸூடன் மோதுண்டு அதனை எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதுண்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
இந்த விபத்தி ஹட்டன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் சாரதியே காயமடைந்துள்ளார்.
இரண்டு முச்சக்கரவண்டிகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து காரணமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை வாகன நெரிசல் காணப்பட்டன.
இவ்விபத்திற்கு காரணம் டிக்கோயா பகுதியிலிருந்து வருகை தந்த முச்சக்கரவண்டியின் சாரதியின் கவனயீனம் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.