இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுரத்த கொலன்னாவைக்கு திடீர் விஜயம்

அஸ்ரப் ஏ சமத்-
வீடமைப்பு பொதுவசதிகள் இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுரத்த கொலன்னாவையில் உள்ள அரச தொழிற் சாலையை 20 வெள்ளிக்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டு அத் தொழிற்சாலையை பாா்வையிட்டு அங்கு ஊழியா்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டாா்.

இத் தொழிற்சாலை கடந்த காலங்களில் அரச நிறுவனங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகள், விவசாய திணைக்களம் ,வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களங்களுக்கு தளபாடங்கள், இரும்பிலான உபகரணங்களை வழங்கி இலாபமீட்டி வந்த ஒரு நிறுவனமாகும் . இத் தொழிற்சாலை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் இயங்குகின்றது. இங்கு 400க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், சாலைகள் அரச சொத்துக்கள் உள்ளன. ஆனால் கடந்த கால அரசு இந் நிறுவனத்திற்குரிய உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்வதை தடுத்து தனியாா் நிறுவனங்களிடம் பொருட்களை கொள்முதல் செய்தமையால் இந் நிறுவனம் நஸ்டத்தில் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.
இங்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சா் இங்கு விஜயம் செய்து அங்கு நிலவும் குறைபாடுகள் ஊழியா்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டு ஏனைய அரச நிறுவனங்களிடம் இந் தொழிற்சாலையின் உற்பத்திகளை கொள்முதல் செய்து இதனை ஒரு இலாப மீட்டும் அரச நிறுவனமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். அத்துடன் இயந்திரங்கள், உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களை கொள்முதல் செய்தல் போன்ற விடயங்களை ஊழியா்களுடன் ஆராய்ந்தாா்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -