எமது முஸ்லிம் சமூகம் என்ற அடிப்படையில் இன்று பல சவால்களை எதிர்கொண்டு இருக்கின்றோம்.இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு அவர்களின் வாக்குவங்கிகளை உயர்த்துவதற்கு இன்று சந்தைப்படுத்தும் ஒரு விடயமாக இனத்துவ அரசியலை கைக்கொள்ளுகின்ற காலகட்டமாக இன்று உலகமே மாறிக்கொண்டு வருகின்றது.குறிப்பாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ரெம்ப் அதுபோல இந்திய பிரதமர் நரேந்திரா மோடி ஆகியோர் இதனை கைக்கொண்டு செயற்படுத்தி வருகின்றனர் உலகில் இன்று பலநூறு இனத்துவ குழுக்கள் காணப்படுகின்றன இவை எல்லாவற்றுக்கும் எதிராக இன்று எமது இஸ்லாம் மார்க்கம் திருப்பிவிடப்பட்டுள்ளது.குறிப்பாக இன்று இந்தியாவில் 20 கோடி முஸ்லிம் மக்களின் வாழ்வதற்கான உரிமை அதாவது பிராஜா உரிமையை கேள்விக்கு உட்படுத்துகின்ற வகையில் சட்டம் ஒன்றினை அண்மையில் நரேந்திரா மோடி அவர்கள் பாராளுமன்றத்தில் இயற்றினர்.
அந்த சட்டம் அவர்களின் மூதாதயர்களின் வரலாறு அவர்களின் அத்தாட்சிகளை கேட்கின்ற போது முஸ்லிம் சமூகத்தினை நாடற்றவர்களாக ஆக்கி அவர்களை இந்தியாவை விட்டு துரத்துகின்ற ஆரம்ப கைங்கரியத்தை இந்திய பிரதமர் இன்று கையில் எடுத்து இருகின்றார்.இதனால் ஒட்டுமொத்த சமூகமும் வீதியில் இறங்கி இருக்கின்றனர்.
எனவே எமது நாட்டிலும் காணப்படுகின்ற இனத்துவ அரசியல் முறைமை ஒழிக்கப்பட வேண்டும்.எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு என்பது பாதுகாக்கப்பட வேண்டும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை,ஓட்டமாவடி மக்கள் தங்களின் எல்லை சம்மந்தமான பிரச்சினையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் அதுபோல் கல்முனை முஸ்லிம்கள் தங்களுடைய இருப்புக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார்கள் இவ்வாறே திருகோணமலை,அம்பாரை என்று எல்லா இடங்களிலும் முஸ்லிகளின் இருப்பு வாழ்வியலுக்கான போராட்ட களமாக மாற்றப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் எங்களின் எதிர்காலத்தை முகம்கொடுப்பதற்காக சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் ஓட்டமாவடியில் நேற்று(28)நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகின்ற போதே இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி இன்று உலகளாவிய ரீதியில் எல்லோரும் பேசுகின்ற விடயம் துரேஸ்டவசமாக எங்களுடைய நாட்டில் கடந்த காலத்தில் இருந்த யுத்த சூழ்நிலை எமது நாட்டில் உள்ள கல்வி வளத்தினையும் கல்வி துறையினையும் மேம்படுத்துவதற்கான பல தடைகள் இருந்தன.இருந்தும் கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்து மிகப் பெருமதியான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.புதிய அரசு வந்த பின் கல்வி அமைச்சர் இந்த நாட்டில் பல்கலைக்கழகம் செல்லவேண்டிய மாணவர்களின் தொகையை அதிகரிப்பதற்காக இன்று புதிய வேலைத்திட்டங்களை கூட புதிய அரசு ஆரம்பித்துள்ளது.
எமது நாட்டில் புதியதொரு நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது நாட்டின் புதிய கல்விக்கொள்கை ஊடாக புதிய வேலை வாய்ப்புக்கள், புதிய நிதி சந்தைகள்,புதிய அறிவில் சார்ந்த தொழில்நுட்ப சந்தைகள் எமது நாட்டில் உருவாக்கப்படுவதற்குரிய வேலைத்திட்டங்கள் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு வருகின்றன எனவே அந்த திட்டத்திற்கு ஏற்றால் போல எமது பிள்ளைகளை தயார்படுத்தக்கூடிய கடமைப்பாடு நாம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
இன்று கொழுப்பு நகரை எடுத்துக்கொண்டால் போர்ட் சிட்டி என்று பெரியதொரு துறைமுக நகரம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது அவற்றினுடாக தெற்காசியாவில் மிகப்பெரிய பிராந்திய நிதி நகரமாக கொழும்பு மாறுகின்ற போது நாட்டின் நாலா புறமும் ஒரு கைத்தொழில் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட இருக்கின்றது எமது நாட்டில் கல்வி கற்று வெளியேறுகின்ற மாணவ செல்வங்களுக்கு சிறந்த எதிர்காலம் நாட்டில் உருவாக்கி கொடுக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.என்று குறிப்பிட்டார்.