ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் முன்னெடுத்துள்ள நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் முழு நாடும் இணைந்து வருகின்றன.
இந்நிலையில் மலையகத்தில் உள்ள நகரங்களை அழகு படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மலையக இளைஞர் யுவதிகள் இணைந்து பல நகரங்களில் பொது இடங்களின் பாது காப்பு கருதி அமைக்கப்பட்டுள்ள சுவர்களுக்கு வரணங்;களை பூசி அழகு படுத்தி ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
இந்த திட்டமானது தற்போது மலையகத்தில் உள்ள கினிகத்தேனை,வட்டவளை,ஹட்டன் ,தலவாக்கலை உள்ளிட்ட பல நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த செயத்திட்டத்தினூடாக இளைஞர்கள் தங்களது பொன்னான காலத்தினை வீணே செலவு செய்யாது.நாட்டடிக்கு பயனுடைய செயல்களில் ஈடுபடுவது மிகவும் வரவேற்க தக்க விடயம் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் மூலம் இளைஞர்கள் தவறான வழிக்களுக்கு செல்வதனை தவிர்க்கப்படுவதாகவும் நாடு பற்றிய சிந்தனை மற்றும் ஆக்கத்திறன் ஆகியன அதிகரிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்டுகின்றன.