தெற்காசிய கராத்தே விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற சௌந்தராஜா பாலுராஜ் கௌரவிப்பு

எம்.என்.எம்.அப்ராஸ்-

நேபாளத்தில் நடைபெற்ற 13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் கராத்தே போட்டியில் பங்குபற்றி வெண்கலப் பதக்கத்தை வென்று எமது நாட்டுக்கும் கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்த சௌந்தராஜா பாலுராஜ் கௌரவிக்கும் வைபபம் கல்முனை வலய விளையாட்டு
பயிற்றுவிப்பாளர்களினால் நேற்று (14) ஒழுங்கு செய்யப்பட்டது .

இதன் போது
அவரது சொந்த ஊரான சேனைக்குடியிருப்பு, மற்றும் மருதமுனை,நற்பிட்டிமுனை , கல்முனை ,சாய்ந்தமருது காரைதீவு பிரதான வீதியினுடாக நிந்தவூர் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பாட்டார் . வீதியில் பொது மக்கள் நின்று இவருக்கு வாழ்த்துக்ககளை தெரிவித்தனர். மேலும் இவரை கெளரவிக்கும் நிகழ்வு
கல்முனை வலயகல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் தலைமையில்
நிந்தவூர் அல் -மஸ்ஹர் பெண்கள் தேசிய பாடசாலையில் அன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் முன்னாள் சுகாதார இராஜங்க அமைச்சரும் பாரளுமனற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் கல்முனை வலய வலயக்கல்வி அதிகாரிகள் ,நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -