கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து நிர்க்கதியான நிலையில் பாடசாலைகள், வழிபாட்டிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
அந்த வகையில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட காவத்தமுனை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மக்கள் வெள்ளப்பாதிப்பினை எதிர்கொண்டவர்களாக காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் பாடசாலையில் தஞ்சமடைந்துள்ள காவத்தமுனை மக்களை நேற்று 22.12.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
முன்னாள் முதலமைச்சருடன் சட்டத்தரணி ஹபீப் ரிபான், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் மீரான் ஹாஜி, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜெஸீமா, பிரதேச சபை வேட்பாளர் றணீஸ் இஸ்மாயீல் மற்றும் ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தனர்.