கல்முனை வடக்கு செயலகம் தரமுயர்த்தல் தொடர்பில் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் எஸ். அமுனுகமவுடன் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவரும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போக்குவரத்து முகாமையாளருமான த.ஹரிபிரதாப் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை பிராந்திய இளைஞர் அணியின் பிரதிநிதிகளான ஆர்.சி றஜிவன், ஜெகநாதன் கிஷாந்தன் ஆகியோர் புதன்கிழமை(11) குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கல்முனை வடக்கு செயலகம் தரமுயர்த்தல் , கல்முனை பிராந்திய இளைஞர்களுக்கான எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் திலும் எஸ். அமுனுகம கல்முனை வடக்கு செயலகம் தரமுயர்த்தல் சம்பந்தமான முன்மொழியப்பட்ட விடயங்களை ஜனாதிபதி ,பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பாக கல்முனை பிராந்திய இளைஞர்களுக்கான எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.