இளைஞர் விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து வருடாந்தம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வரும் இளைஞர் முகாம் இவ்வருடமும் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் "எதிர்பார்ப்பின் இளைஞர் முகாம்" எனும் தொனிப்பொருளில் நடைபெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் இளைஞர் கழக அங்கத்தவர்களுக்கான இளைஞர் முகாம் டிசம்பர் 13,14,15ம் திகதிகளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வதிவிட இளைஞர் முகாம் நடைபெற்றது.
இந் நிகழ்வானது அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரபாத் லியனக்கே அவர்களும் கௌரவ அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் நளீன் அனுப்பிரியா அவர்களும் விஷேட அதிதியாக இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் நுவரெலிய மாவட்ட உறுப்பினர் திலஞ்சன சாலியா அவர்களும் நட்சத்திர அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களும் மாட்சிமை அதிதியாக பிரதேச நிருவாக உத்தியோகத்தர் என்.எம். நழீர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இளைஞர்களின் கழக அனுபவங்களை
பரிமாறப்பட்டதுடன் "தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் கழக கருத்திட்ட வரலாறு தொடர்பாக முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். அஸாம் வழங்கினார்.
பங்குபற்றுனர்களின் சுய ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.இவ் இளைஞர் முகாமானது அட்டாளைச்சேனை சேர்ந்த 67 இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலுடன் ஆக்கபூர்வமான முறையில் நடைபெற்றது.