நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.
அந்தவகையில் மலையகத்தில் 25.12.2019 அன்று கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இயேசு பிறப்பையொட்டி கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் தலவாக்கலையில் உள்ள புனித பத்திரிசியார் தேவலாயத்தில் 25.12.2019 அன்று நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை மெத்யூ அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக விசேட ஆராதனைகளும் இடம்பெற்றன.
இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேவலாயத்திற்குள் பிரவேசிக்கும் பக்தர்களை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய பின் தேவலாயத்திற்குள் செல்ல அனுமதி அளித்தினர். மேலும் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தமை மேலும் குறிப்பிடதக்கது.