இன்று (20) குச்சவெளி பிரதேச செயலாளர் திரு தனேஸ்வரன் தலைமையில் காலை 11.00 மணியளவில் குறித்த புனித பூமி திட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் குச்சவெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது
கலைத்துறையாடலில் கிழக்கு மாகாண பதில் காணி ஆணையாளர் திரு.ரவி ராஜன்,கொழும்பு காணி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் அதிகாரிகள்,மாவட்ட வன பரிபாலன அதிகாரிகள்,புல்மோட்டை மதகுரு,குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்
இதன் போது கொழும்பில் இருந்து வருகை தந்த அதிகாரிகளுக்கு பிரதேச செயலாளர்,கிராம சேவகர்கள்,மற்றும் ஏனைய அதிகாரிகளால் ஏலவே அளவீடு செய்யப்பட்ட பகுதி தமது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்படாமல் கொழும்பில் இருந்து வருகை தந்து அளவீடு செய்தமை முறையற்ற விதத்தில் இடம்பெற்றிருப்பதாகவும்,
அளவீடு செய்யப்பட்ட காணிகளுக்குள் பிரதேச பொது மக்களின் விவசாய காணிகள் இருப்பதாகவும் அவற்றில் அனுமதி பத்திரம் உள்ளவர்கள் மற்றும் நீண்ட காலமாக விவசாயம் மேற்கொண்ட காணிகள் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களின் காணிகளுக்குள் இன்னும் செல்லமுடியாத நிலைமை,மக்களின் காணிகள் துப்பரவு செய்வதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்க பட்டது
இதன் மதகுருவினால் குறித்த பகுதிகளில் சிங்கள மக்களுக்கு அநியாயம் இடம்பெறுவதாகவும்,இன பாகுபாட்டிலே சேவைகள் இடம்பெறுவதாகவும்,பௌத்த கோவில்களுக்கான காணிகளை பெற்று தருவதில் இழுத்தடிப்பு செய்யப்படுவதாகவும் பிரதேச செயலகத்தினூடாக பொய்யான அனுமதி பத்திரம் பலருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டபோது
திருகோணமலை மாவட்ட அதிகாரிகளால் அவ்வாறு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் மற்றும் குச்சவெளி பிரதேச செயலகத்தினூடாக எந்த பாகுபாடின்றி சேவைகள் இடம்பெறுவதாகவும்,குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் மாகாண காணி திணைக்களத்தினூடாக இதுவரை அவ்வாறான பொய்யான அனுமதி பத்திரமோ அல்லது முறையற்ற சேவைகளோ இடம்பெறவில்லை என்பதை அதிகாரிகள் கொழும்பில் இருந்து வருகை தந்த அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தியுள்ளனர்
மேலும் ஏற்கனவே களவாக கொழும்பில் இருந்து வருகை தந்து அளவீடு செய்யப்பட்ட படத்தில் திருகோணமலை மாவட்ட காணி உத்தியோகத்தர் கலந்துகொண்டு உறுதி படுத்தியதாகவும் பொய் கை ஒப்பம் இடப்பட்டுள்ளது
இது விடயமாக மாவட்ட அதிகாரிகள் குறித்த காணி உத்தியோகத்தர் தான் அந்த படத்தில் கை எழுத்திடவில்லை என கடிதம் ஒன்றை மறுத்து தமக்கு வழங்கி இருப்பதாகவும் அவை ஆராயப்படவேண்டும் என கொழும்பில் இருந்து வருகை தந்த அதிகாரிகளுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது
இதனை அடுத்து கொழும்பில் இருந்த வருகை தந்த அதிகாரிகளால்
ஏலவே அளவீடு செய்யப்பட்ட காணிகளை பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மற்றும் குறித்த பகுதியின் கிராம சேவகர்கள் பார்வையிட்டு பகுதிகளில் உள்ள அனுமதி பத்திரம் உள்ளவர்கள் மற்றும் நீண்ட காலம் விவசாயத்தை மேற்கொண்ட நபர்களின் விபரங்களையும் சேகரிக்கும் படியும் கிராம சேவகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் இது விடயமாக புல்மோட்டை மற்றும் திரியாய் கும்புறுபிட்டி பகுதிகளின் இன்று ன்(20) வெள்ளி கொழும்பில் இருந்து வருகை தந்த காணி உத்தியோகத்தர்கள் பார்வையிடுவதற்காக மேற்கொள்ளவிருந்த விஜயம் அதிகாரிகளின் தெளிவான விளக்கங்களால் பகுதிக்கான விஜயம் பிற்போடப்பட்டுள்ளது
இதன் போது மாவட்டத்தில் குத்தகைக்கு காணி வழங்குவது தொடர்பான பல பிரச்சினைகள் ஆராயப்பட்டதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்