வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பாடசாலை மாணவர்களின் தொடர் கல்வி முன்னேற்றத்தை கவனத்திற்கொண்டு ஜம்இய்யதுஸ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் செவ்வாய்க்கிழமை (17) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ் ஷஹீத் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.சத்தார் தலைமையில் இடம்பெற்ற
பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் (நளிமீ) , காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி ,மெளலவியா சில்மியா தாரிக் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தனர்.