கிணறு வெட்ட பூதம் கிழம்பிய நிலையில் மோடி அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டம். இதன் உள்நோக்கம் என்ன ?
முஸ்லிம்களை இலக்குவைத்து இந்தியாவில் குடியுரிமை சட்டத்தினை வி.ஜே.பி அரசு நிறைவேற்றியுள்ளது.
இராணுவத்தினர்களை உசார் நிலையில் வைத்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஸ்மீர் மாநிலத்துக்கு இருந்துவந்த சிறப்பு அதிகாரத்தை நீக்கியபோது உள்நாட்டிலிருந்து கிழம்பிய எதிர்ப்புக்கள் போராட்டமாக வெடிக்கவில்லை.
அதனால் துணிச்சலும், உற்சாகமும் அடைந்த மோடி தலைமையிலான வி.ஜே.பி அரசு, முஸ்லிம்களுக்கெதிரான அடுத்த கட்ட நடவடிக்கையாக குடியுரிமை சட்டத்தினை கையிலெடுத்துள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதம் சிங்கள ஆட்சியாளர்களை வழிநடாத்துவது போன்று, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வி.ஜே.பி அரசு மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றி அதன்மூலமாக இரத்தமின்றி முஸ்லிம்களை அழிக்க முற்படுகின்றது.
அண்மைக்காலத்தில் இந்த இரு நாடுகளிலும் முஸ்லிம்களின் விகிதாசாரம் அதிகரித்துள்ளதுடன் ஆட்சி செய்கின்ற பெரும்பான்மை இனங்களின் விகிதாசார அதிகரிப்பில் வீழ்ச்சி அடைந்ததுமே இதற்காண காரணிகளில் ஒன்றாகும்.
இருபது வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பத்து வீதமாக இருந்த முஸ்லிம்களின் விகிதாசாரம் தற்போது சுமார் பதினைந்து வீதமாக அதிகரித்துள்ளது.
இன்னும் பல வருடங்கள் சென்றால் இந்தியாவில் முஸ்லிம்களின் விகிதாசாரம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்ற அச்சநிலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கதிகலங்க வைத்துள்ளது.
இதனை கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் விகிதாசாரத்தை குறைக்கும்பொருட்டு குடியுரிமை சட்டத்தினை கொண்டுவந்து அதன்மூலமாக பல இலட்சம் முஸ்லிம்களை நாடு அற்றவர்களாக ஆக்கிவிட்டு அவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான மோடி அரசின் சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இந்த சட்டமூலமாகும்.
பாகிஸ்தான், பங்காளதேஸ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து நீண்டகாலங்களுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய ஏனைய மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முன்வந்த மோடி அரசு, குறித்த நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க முடியாது என்று சட்டம் இயற்றியுள்ளது.
பாகிஸ்தான், வங்காளதேஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த நாடுகளுக்கு குடியேறி செல்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று மோடி அரசு நியாயம் கூறுகின்றது.
அப்படியென்றால் பௌத்த நாடான மியன்மாரிலிருந்து குடியேறிய முஸ்லிமகளின் நிலை என்ன ? குறித்த முஸ்லிம் நாடுகளிலிருந்து வந்தவர்கள் அங்கு செல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால், பொத்த நாடான மியன்மாரில் சிறுபான்மையாக வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அங்கு என்ன பாதுகாப்பு உள்ளது ?
விடயம் இதுதான். தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் என்னும் தீவிரவாத அமைப்பினர்களை திருப்திப்படுத்தி அதன் மூலம் இந்தியாவில் பெரும்பான்மையாக வாழ்கின்ற இந்துக்களின் வாக்குகளை தக்கவைத்துக் கொண்டு தொடர்ந்து வீ.ஜே.பி அரசு ஆட்சியை தொடர முயற்சிக்கின்றது.
ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோன்று வடகிழக்கு மாநிலங்கள் உட்பட இந்தியாவில் பரவலாக இந்த சட்டமூலத்துக்கு எதிராக இந்துக்களே போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள். இதனால் மோடி அரசு கதிகலங்கியுள்ளதுடன், இந்தியாவில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.