சம்மாந்துறை பிரதேச சபையின் வருடாந்த ஒன்று கூடல்

எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை பிரதேச சபை ஏற்பாடு செய்த வருடாந்த ஒன்று கூடல் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதியில் நேற்று (28) இடம்பெற்றது.
சாக்கோட்டம் ஒட்டம், கைறு இழுத்தல், பலூன் உடைத்தல், சங்கீத கதிரை, நீர் வலூன் மாற்றுதல், உள்ளிட்ட பல்வேறு போட்டி நிகழ்வுகளுடன் நாடகம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம்முறை விசேடமாக சம்மாந்துறை பிரதேச சபையின் சாரதி செய்யது அகமது ஜெமீல் அற்பணிப்புடன் சேவை செய்தமைக்காகவும், வருடத்தில் மிகக் குறைந்த விடுமுறை பெற்றமைக்கவும் சிறப்பு விருது வழங்கிகௌரவிக்கப்பட்டார்.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள், கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -