ஊடகவியலாளர்களூடாக இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் எனும் துணைப்பொருளில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு வெள்ளிக்கிழமை (6) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையில் இடம்பெற்றது..
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் வளவாளராக கலந்துகொண்டு சமூக நல்லிணக்கம், ஒழுக்க விழுமியங்கள், ஊடகத்துறை மற்றும் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் ,சிறப்புக்கள் என்பவற்றை மிகத் தெளிவான முறையில் விளக்கமளித்தார்.
இந் நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் த.வசந்தராஜா, செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் வ.சக்திவேல், திட்ட உத்தியோகத்தர் கபிரியேல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.