நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை தொடர்ந்து நாட்டில் நாளா பாகங்களிலும் இளைஞர்கள் ஒன்று திரண்டு நாட்டுக்கும் சமூகத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது வரை காலமும் இந்த நாட்டில் அபிவிருத்தியிலும் ஏனையவிடயங்களிலும் சரியான முறையில் இளைஞ்களை வழி நடத்தப்படாமையினால் அதிகமான இளைஞர்கள் பல்வேறு தவறான வழிகளில் செல்வதனையே காணக்கூடியதாக இருந்துள்ளன.
இந் நிலையில் இன்று இளைஞர்கள் தனாகவே முன்வந்து பல நல்ல விடயங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
இது இந்த நாட்டிக்கு மற்றுமன்றி தாங்கள் சூழ்ந்து வாழும் சமூகத்திற்கு ஏற்பட போகின்ற நல்ல விடயமாகும்.
நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருவுக்கமைவாக இன்று சகல நகரங்களும் சுத்தப்படுத்தி அழகு படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட போது நாட்டில் உள்ள இளைஞர்கள் இன்று இதற்கு துணை புரிந்து வருகின்றனர்.
இதனால் இந்த நாடு ஒரு சுத்தமான நாடாகவும் அழகுமிக்க நாடாகவும் மாறுவதில் எவ்வித அச்சமில்லை.
இதனை உணர்த்துகின்ற வகையில் நாடெங்கிலும் உள்ள இளைஞர்கள் இன்று வீதி ஒரங்களில் காணப்படும் மதில்களை சுத்தம் செய்து ஓவியங்களை தீட்டி வருகின்றனர்.
இது வெளிநாட்டு சுற்றுலா பயனிகளின் வருகையினை அதிகரிக்க ஒரு காரணமாக அமைவதுடன் உலகலாவிய ரீதியில் எமது நாட்டின் அபிமானம் அதிகரிப்பதற்கான காரணமாகவும் உள்ளன.
ஆனால் இன்று ஒரு சிலர் அரசியல் லாபம் கருதியும்,தனது சுய நலத்திற்காகவும் இளைஞர்களை திசை திருப்பி இனவாதம் தூண்டும் வகையிலும் இனங்களிக்கிடையே பிரிவினையினை தோற்றுவிக்கும் வகையிலும் சமூவலைத்தளங்கள் உடாக கருத்துக்களை வெளியிட்டு அதனூடாக இனவாதம் தூண்டும் வகையில் சித்திரங்களை தீட்ட முற்படுகின்றனர்.
இது ஒரு சமூத்திற்கு மாத்திரமன்றி முழு நாட்டுக்கும் பல்வேறு வழிகளில் தீங்கினை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது ஆகவே இவ்வாறு செயப்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எவறானும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
நல்ல விடயங்களுக்காக அணிதிரளும் இளைஞர் யுவதிகளை நல்ல விடயங்களுக்கே பயன்படுத்த வேண்டும.; என்பது அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும்.
அவ்வாறு இல்லாது அவர்களை தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்தப்படுமேயானால் எதிர்காலத்தில் இவர்களின் பங்களிப்புக்கள் நல்ல விடயங்களுக்கு பெற்றுக்கொள்வது கடிமானதாக மாறிவிடும.; இன்று மலையகத்திலும் இளைஞர்கள் அணிஅணியாக திரண்டு பல நல்ல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை மலையக தலைவர்களும் எதிர்காலத்தில் சமூக அக்கறையுடையோர் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
அரச மற்றும் அரசார்பற்ற சமூக நலன் சார்ந்த திட்டங்களின் போது மலையக இளைஞர்களை பங்குபெறச் செய்வதன் மூலம் மலையகத்தினை பாரிய அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்லலாம் என்பது இளைஞர்களின் நன்நம்பிக்கையாகும்.
இது குறித்து ஓவியம் வரைதலில் ஈடுபட்டுள்ள பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கருத்து தெரிவிக்கையில்..
கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் நாட்டில் உள்ள நகரங்களை சுத்தப்படுத்தி ஓவியங்களை தீட்டி அழகுபடுத்தி வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார.; அதற்கு அமைவாக கடந்த ஒரு மாதமாக காலமாக நாட்டில் பல இடங்களில் இளைஞர்களால் சிதிதிரங்கள் வரைந்து அழகுபடுத்தி வருகின்றனர்.
அந்த செயப்பாட்டில் மலையக இளைஞர்களும் இணைய வேண்டும்.என்ற நோக்கில் இன்று மலையகத்தில் ஹட்டன் நுவரெலியா வீதியில் பல இடங்களில் வர்ணங்கள் தீட்டி அழகுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதில் மலையகத்தினை பிரதிபலிக்கப்பட கூடிய சித்திரங்கள் எமது மக்களின் ;கலை, கலாசார அம்சங்கள் அவர்களின் வாழ்வியலினை உட்படுத்தும் வகையில் இந்த சித்திரங்கள் அமைந்துள்ளன.நாட்டின் ஒரு சாராரை மாத்திரம் பிரதி பலிக்கும் சித்திரங்கள் ஏனைய சமூகத்தினை ஒதுக்கியுள்ளதாக என்ற சிந்தினையிலிருந்து மாற்றப்பட்டு இது எமது நாடு என்ற எண்ணத்தினை தோற்று; விக்கும் எனவே சித்திரங்கள அனைத்து மக்களையும் உள்ளடக்கும் வகையில் அமைந்திருப்பது மிகவும் வரவேட்க தக்கதாக இருக்கின்றன.இந்த செயப்பாட்டிற்காக ஒத்துழைக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் இதற்கு உதவி புரிந்து அனைவருக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில்.மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இன மத மொழி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து மிகவும் ஒற்றுமையாக செயப்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
உண்மையிலேயே வரவேற்க தக்க விடயம் இது மலையக இளைஞர்களின் மறைந்து கிடக்கும் கலைத்திறமையினை வெளிப்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைவதுடன் எதிர்கால இளம் சமூதாயத்திற்கும் ஒரு முன் உதாரணமாக அமைகின்றது.இவ்வாறான செயப்பாடுகள் மூலம சமூக நலன் சார்ந்த விடயங்களில் இளைஞர்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைவதுடன் மலையகப்பகுதியில் சந்தர்ப்பம் கிடைக்காமல் முடங்கியுள்ள இளைஞர் யுவதிகளுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.