குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஜாமா மசூதி அருகே போராட்டம்

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜாமா மஸ்ஜித் அருகே பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜாமா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். தொழுகைக்கு பின்னர் அவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் மசூதி அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டக்காரர்களில் சிலர் மகாத்மா காந்தி மற்றும் பாபாசாகேப் அம்பேதகரின் படங்களை ஏந்தியவாறு மத்திய அரசு மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக, இன்று ஜாமா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்ல போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த பீம்சேனா அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஆளில்லா விமானங்கள் மூலம் அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -