க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
இது தொடர்பில் அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் சுற்றுநிருபம் மூலம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித அறிவித்துள்ளார்.
இதற்கமைய, முதலாம் கட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் 2020 ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இரண்டாம் கட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், ஜனவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக 30,000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமாகிய க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.