தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்கள் தமிழ் மக்களின் 2000 ஏக்கா் காணிகளை இரவோடிரவாக அபகரித்து விட்டதாக பாரிய அளவிலான குற்றச்சாட்டு ஒன்றை தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார். அதுக்கு பதிலளித்த அவர் மேலும் தனது உரையில்,
தமிழ் மக்களினால் காட்டி கொடுப்பாளராகவும், தமிழின அழிப்பு துரோகியாகவும் அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் அவர்களின் அண்மைய கால கருத்துக்கள் முஸ்லீம்களையும், முஸ்லிம் தலைமைகளையும் வெகுவாக தாக்குவது போன்று அமைந்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற வேண்டும் என்பதை காரணமாக கொண்டு இவ்வாறான காட்டுமிராண்டி அறிக்கைகளை விடுகிறார். அதை மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.
தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்கள் தமிழ் மக்களின் 2000 ஏக்கா் காணிகளை இரவோடிரவாக அபகரித்து விட்டதாக பாரிய அளவிலான குற்றச்சாட்டு ஒன்றை தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மான் தெரிவித்திருந்தார். அவ்வாறான எவ்வித தேவையும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களுக்கு இருக்கவில்லை.
கருணா அம்மான் கூறும் நில அபகரிப்பு விடயம் அவர் முக்கிய பதவி வகித்த புலிபயங்கர வாதிகளால் 1990 தொடக்கம் 2002 வரை வடக்கு கிழக்கு மாகாண எல்லை முழுவதிலும் நடைபெற்றது. என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
இணைந்த வடகிழக்கை பிரிப்பதிலும் நாட்டை சீரழித்த பயங்கரவாதிகளை அழிப்பதிலும் அக்கரையாக இருந்தவர் முஸ்லிம் மக்களின் தலைவன் எல்.எம். அதாஉல்லா. அவர் மீது சேறு பூசி மீண்டும் இனவாதத்தைத் தூண்டி தமது அரசியலில் கெட்டியாகப் பயணிக்க கருணா அம்மான் முயற்சி செய்வது சிறுபான்மை இன மக்களுக்கு ஆரோக்கியம் இல்லை என்பதனை மக்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாத முத்திரையை அகற்றி ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்க கருணா அம்மான் இன்னும் பழக்கப்படவில்லை என்பதனை அவர் அறிக்கைகளாக விடும் ஒவ்வொரு செய்தியும் சொல்கிறது.
கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள முஸ்லீம் மக்களின் சொத்துக்களை அபகரித்து யார் ? அந்த மக்களை இரவோடு இரவாக விரட்டியடித்தது யார்? முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க திட்டமிட்டு முகாம் அமைத்து முஸ்லீங்களிடம் கப்பம் அறவிட்டது யார்? என்பதை உலகமே நன்றாக அறிந்து வைத்துள்ளது. வேண்டிய நாசகார கருமம் எல்லாவற்றையும் திட்டமிட்டு அரங்கேற்றிவிட்டு இப்போது வாக்குவங்கியை தக்கவைக்க வாய்க்கு வந்ததையெல்லாம் அவர் உளருகிறார் என்றார்.