கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் நோர்வூட் பொலிஸாரால் கைது.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் எலிபடை பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேரை இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் கெசல்கமுவ ஓயாவின் பல இடங்களில் இரவு வேளைகளில் சட்ட விரோதமான முறையில் மிகவும் சூக்சுமமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து,விசேட பொலிஸ் குழு ஒன்று இதனை பின் தொடர்ந்து சுற்றிவளைத்து மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட வர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பலங்கொடை மற்றும் பொகவந்தலாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மாணிக்கல் அகழ்வில் இவர்களுக்கு பலத்த அனுபவம் இருப்பதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சந்தேக நபர்களுக்கு எதிராக அனுமதி பத்திரமின்றி மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நாளை (16) திகதி திங்கட்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -