புல்மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக புதிய கிழக்கு மாகாண ஆளுணருக்கு மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது
இன்று (19) வியாழன் காலை 11.00 மணியளவில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்திற்கு புதிய கிழக்கு மாகாண ஆளுணர் திருமதி அனுராதா யகம்பத் அவர்கள் கலந்துகொண்டு மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலகங்களை சேர்ந்த பிரதேச செயலாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்
இதன் போது ஆளுனர் அவர்களால் ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் எதிர் நோக்கும் முக்கியமான பிரச்சினைகள் முன் வைக்கும்படி வேண்டியதை அடுத்து
குச்சவெளி பிரதேச செயலாளர் திரு தனேஸ்வரன் மற்றும் மாவட்ட அரசாங்க திரு புஸ்பகுமார ஆகியோரால் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டை,கும்புறுபிட்டி,திரியாய் மற்றும் தென்னைமறவாடி பிரதேசத்தில் புனித பூமி என்ற திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான கணக்கான ஏக்கர் காணிகள் அளவிடுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது
இதன் பொது செயலாளர் விபரமாக எடுத்துரைத்ததுடன் அரசாங்க அதிபர் அவ்வாறு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை வழங்குவதில் பாரிய சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து ஆளுநர் அவர்களும் இது விடயமாக பூரண அறிக்கை ஒன்றை தருமாறு குச்சவெளி பிரதேச செயலாளரிடம் உத்தரவு பிறப்பித்தார்
குறித்த புல்மோட்டை பிரதேசத்தில் வசிக்கும் மதகுரு ஒருவரால் புல்மோட்டை பொது மக்களின் விவசாய காணிகள் உள்ளடக்கிய பகுதிகள் புனித பூமிக்கு இனங்காட்டி இருப்பது குறிப்பிட தக்கது
மேலும் புல்மோட்டை பிரதேசத்தில் புனித பூமிக்கான அளவீடுகள் சட்டத்திற்கு முரணான விதத்தில் கொழும்பு நில அளவை திணைக்களத்தால் மாத்திரம் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் திருகோணமலை நில அளவை திணைக்களம் குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் புல்மோட்டை பிரதேச கிராம சேவகர்களுக்கும் அறிவிக்கப்படாமல் கூகுள் படத்தினூடாக (google map)அளவிட பட்டுள்ளது என்பது குறித்த ஒரு நபரின் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது
குறித்த பிரதேச செயலக காணிகள் அளவிடும்போது அந்த மாவட்டத்தின் நில அளவையாளர் அதிகாரிக்கு பிரதேச செயலாளரால் கடிதம் மூலம் வேண்டுகோள் விடப்படும் அதற்கமைவாக நில அளவை அதிகாரி பிரதேச செயலகத்தின் காணி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவகர்களுக்கு காணியை இனங்காட்டும்படி அறிவிப்பார் பின்னரே அளவீடுகள் இடம்பெற்று கே எல்லை கற்கல் இடப்படும் இதுதான் உண்மையான நடைமுறை
எனவே நாளை (20) வெள்ளி கொழும்பு காணி ஆணையாளர் நாயகத்தின் காரியாலயத்தில் இருந்து வரவிருக்கும் அதிகாரிகளுக்கு எவ்வாறு பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்களால் காணிகளை இனம் காட்ட முடியும் களவாக கொழும்பில் இருந்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் ஜீ.பி.எஸ் யினூடாக அளவிட்டது முற்றிலும் சட்ட விரோதமானது
எனவே பிரதேச செயலாளரால் ஆளுணருக்கு அறிக்கை சமர்பிக்கப்படுகின்ற போது சட்டத்திற்கு முரணான அளவீடு மற்றும் பொது மக்களின் காணிகள் தொடர்பாக உண்மையான பிரதேச மக்கள் நீண்ட காலமாக விவசாயம் செய்து வந்த யுத்தத்தால் இடம் பெயர்த்த மற்றும் நீண்ட காலமாக ஆதாரங்கள் இருந்தும் காணி அணுமதி பத்திரம் வழங்கியும் வழங்காமல் இருக்கின்ற உண்மையான அறிக்கை வழங்கும் பட்சத்தில் எமது பிரதேச காணிகள் உரியவர்களுக்கு மீண்டும் கிடைப்பதோடு புனித பூமி திட்டத்தின் உண்மையான சுயரூபத்தியும் அரித்துக்கொள்லாலாம் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.