சுமந்திரன் எம்பி மீது காழ்ப்புணர்ச்சியை கக்கும் அறிவிலிகள் !


எம்.எம்.நிலாம்டீன்-
" அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன்" என்று மனிசன் அப்போது சொல்லி விட்டார் ” .
ஆனால் இந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டு சுமந்திரன் MP யை பதவி விலக வேண்டும் என்று சில அரைவேக்காடுகள், கால்வேக்காடுகள் கூக்குரலிடுவது எந்த ஊர் நியாயம் .
ஏதோ ஒரு அசுர நம்பிக்கையில் சொல்லிட்டார். அதை பிடித்துக்கொண்டு தொடர்ந்து சுமந்திரன் எம்பி மீது அம்பு வீசி வருகின்றார்கள்.

அப்படியானல் தலைவர் சம்மந்தர் ஒவ்வொரு தை மாதமும் தமிழர் தீர்வு வந்துவிடும் என்று 3 வருடமாக சொல்லி வந்தாரே ..தலைவர் மீதும் அம்பு வீச வேண்டுமே. தமிழ் கூட்டமைப்பு எம்பிக்களில் இளவயதாக மூன்று பாசைகளிலும் சரளமாக பேசக்கூடியவர் சுமந்திரன் எம்பி மட்டுமே .. மிகச்சிறந்த முன்னணி வக்கீல் .அவரது வக்கீல் தொழில் ரீதியாக மிக அதிக பண உழைப்புக் கொண்டவர். அரசியலில் வந்துதான் பிழைப்பு நடத்த வேண்டும் என்று அவருக்கு அவசியமில்லை .

சரி சுமந்திரன் எம்பி பதவி விலகினால் நாளை காலை தமிழர் தீர்வு வந்து விடுமா? இல்லை ஈழம் மலர்ந்து விடுமா?என்னமோ சுமந்திரன் எம்பிதான் தமிழர் தீர்வுக்கு குறுக்கே நிற்பது போன்றும் அவர்தான் தடுத்து வருவது போலும் சில காழ்ப்புணர்ச்சி கொண்டோர் விஷம் கக்கி வருகின்றார்கள்.

சுமந்திரன் எம்பி மட்டுமல்ல ஹக்கீம் ரிசாத் போன்றோர் ரணிலுக்கு முட்டுக் கொடுத்து காப்பற்றி வந்தது உண்மைதான் . இவர்கள் ரணிலின் கைபொம்மையாக செயல்பட்டதும் உண்மைதான். இவர்கள் ரணிலின் தந்திர வலைக்குள் அகப்பட்டு சிக்குப்பட்டவர்கள்.
ரணிலின் நரித்தனத்தை இவர்கள் அறியாமல் இல்லை .தமிழர் தீர்வுகள் நாடாளுமன்றில் வரும்போதெல்லாம் பிக்குகளை களத்தில் இறக்கி செய்தவைகள் நமக்கு மறந்து பொய் விட்டதா ?
அதற்கு சுமந்திரன் எம்பி பொறுப்பல்ல .இந்த நாட்டின் கட்டமைப்பு அப்படி அமைந்து விட்டது.இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பு பிக்குகளின் கால்களின் கீழ் உள்ளது. அதற்கு ஏற்றால்போல்தான் இலங்கை ஆட்சி கடந்து செல்லும் .
இந்த ஜென்மத்தில் தமிழர் தீர்வு நிறைவேறுவதாக இல்லை. அதற்க்கான அரசும் இப்போது இல்லை . அதற்க்கான வாய்ப்பும் இல்லை . ரணிலின் ஆட்சியில் அதற்கு ரணில் ஒரு போதும் விரும்பி இருந்திருக்கவில்லை .

நாட்டில் ஒரு ராணுவ ஆட்சி நங்கூரமிட்டுள்ளது
நாட்டில் ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகமும் விரும்பாத ஆட்சியொன்று வந்துள்ளது .இனிமேல் பல சவால்களை சிறுபான்மை சமூகம் சந்திக்க வேண்டும் .பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும் .அதாவது சிறுபான்மை சமுகங்களின் உரிமைகளை பிடுங்கக் கூடிய மிகவும் மோசமான நெருக்கடிக்குள் உள்ளது .அப்படியான ஒரு சவால்களின் போது நீதிமன்ற படிகள் ஏற வேண்டும்.நாடாளுமன்றில் சாதுரியமாக பதில் கொடுக்க நீதிமன்றம் செல்ல சுமந்திரன் போன்றோர் வேண்டும்.

சுமந்திரன் மீது பொறாமை கொண்டு காழ்ப்புணர்ச்சி கொண்டு அம்பு வீசி மக்களின் உரிமைகளை பறித்து விடாதீர்கள் ..
30 வருடகால ஆயுத போராட்டம் பெற்றுத்தர முடியாத தீர்வை சம்மந்தரோ சுமந்திரனோ பெற்றுத்தர முடியாது என்பதை ஈழத்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழர் மத்தியில் இருந்து பல புத்தி ஜீவிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களை கொலை செய்து அளித்து விட்டோம். இனிமேலும் இந்தக் கொலை வெறி கொண்டு அலையாமல் சுமந்திரன் போன்ற சட்ட வல்லுனர்களைக் கொண்டு பல சாவல்களை சமாளிக்க வேண்டிய ஒரு இக்கெட்டான நிலைமையில் உள்ளோம்.
இனிமேலும் சுமந்திரன் எம்பி மீது அம்பு வீசிக் காயப்படுத்தாமல் அடுத்த கட்ட நகர்வாக தமிழ் கூட்டமைப்பு உடையாமல் மற்றக் கட்சிகள் சிதறாமல் ஒட்டுமொத்த தமிழ் வாக்குகளும் எதிர்வரும் பொது தேர்தலில் மீண்டும் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு தமிழர் ஒற்றுமையைக் காட்டுங்கள் .அதற்கான பொறிமுறைகளைக் கையாளுங்கள்.அதற்கான உள்ச்சூழல் புறச்சூழலை உருவாக்குவோம்.
தமிழர் வாக்குகள் சிதறாமல் சிந்தாமல் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் தமிழர் ஒற்றுமையை கோலோச்சுவோம் .







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -