422ஆசிரியர்இடமாற்றம்; ஜனவரி 2ஆம் திகதி அமுல் : மேன்முறையீடு 20க்குள்.
காரைதீவு நிருபர் சகா-கிழக்கு மாகாணத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கிழக்குமாகாண கல்வித்திணைக்கள இணையத்தளமான http://www.ep.gov.lk/en/minieducationindex எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம். தொடர்புடைய தகுதியான ஆசிரியர் சங்கங்களின் பங்கேற்புடன் இவ்விடமாற்றப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
43பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இப்பட்டியலின்படி 422 ஆசிரியர்கள் வலயங்களுக்கிடையில் இடமாற்றம் பெறுகிறார்கள். குறிப்பாக மட்டு.மேற்குவலயத்திலிருந்து 128ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு ஆக 3ஆசிரியர்களே அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களது இடமாற்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி அமுலாகிறதென கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
மாகாணஇடமாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்யவிரும்பினால் எதிர்வரும்20ஆம் திகதிக்கு முன்பதாக அதிபர் வலயக்கல்விப்பணிப்பாளருடாக மாகாண கல்வித்திணைக்களத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் கூறினார்.