வயல்நிலங்களை மூடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைக்க வேண்டும் : பைசல் காஸிம் (பா. உ)


நூருல் ஹுதா உமர்- 
ரசினால் 300 மீட்டர் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த எல்லையினுள் மக்கள் இன்னும் வசிக்கின்றனர். ஆனால் இன்னும் ஒரு சுனாமி அனர்த்தம் வந்தால் மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவார்கள். அம்பாறை கரையோர பிரதேசங்களில் அரச காணிகள் எதுவுமில்லை. நீலாவணை முதல் பொத்துவில் வரையிலான வயல் பிரதேசங்களை மூடி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மக்களை குடியமர்த்த வேண்டும். 

கல்முனை மேல்நிதிமன்ற நீதவானும் இவ்வாறான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார் என சுனாமியின் பதினைந்தாம் ஆண்டு அம்பாறை மாவட்ட பிரதான நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இன்று காலை அம்பாறை அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற போது அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காஸிம் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய அவர்,

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜயவிக்ரம அவர்களிடமும் அம்பாறை அரசாங்க அதிபரிடமும் இதுசம்பந்தமாக பேசியிருக்கிறேன். எதிர்வரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இதுசம்பந்தமான ஒரு முன்மொழிவை வழங்க ஆயத்தமாக இருக்கிறேன் என்றார். சுனாமியால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தில் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதியுடன் கூடிய வீடுகளை அமைக்க முடியாது உள்ளது.

அவர்களின் தேவையை அறிந்து நாம் அவர்களுக்கான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். அடர்த்தியான நெரிசல் மிக்க எமது பிரதேசத்தில் அரச காணிகள் இல்லாமையால் கைவிடப்பட்ட வயல்காணிகளை நிரப்பி அவர்களுக்கான வீடுகளை அமைக்கவேண்டியுள்ளது என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -