ஜனாதிபதியின் பெயரில் விண்ணப்பப்படிவம் -எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒன்றிணைந்த வேலையற்ற சங்கம்

பாறுக் ஷிஹான்-
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உடனடியாக நியமனங்களை வழங்குமாறு கோரியும் ஜனாதிபதியின் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்திற்கு எதிராகவும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை(22) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே குணானந்த தேரர் கருத்து தெரிவிக்கையில்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு முரணாக நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. குறித்த புதிய நியமனங்களை பெரும்பாலும் அரசாங்க கட்சி சார்ந்தவர்களுக்கே வழங்கவுள்ளமை தொடர்பில் சந்தேகம் எழுகின்றது. காரணம் புதிய ஜனாதிபதியின் பெயரில் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் ஒரு விண்ணப்பப்படிவம் பட்டதாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகும்.

மேலும் கடந்த அரசாங்கத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக 57000 வரையான வேலையில்லாப் பட்டதாரிகள் தோற்றியுள்ளதுடன் இரண்டு நேர்முகத்தேர்வுகளுக்கும் சமூகமளித்து ஏமாற்றம் எமது பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதற்காக மாவட்ட செயலகத்தின் ஊடாகவும் பிரதேச செயலகம் ஊடாகவும் இடம் பெற்றுள்ளதுடன் அதற்காக நிதியும் எமது பட்டதாரிகளால் செலவிடப்பட்டுள்ளது. அதற்காக நேரமும் செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தேர்வுகளில் அரசாங்கம் சிலருக்கு மாத்திரமே வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில் ஏனைய வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலையை பெற்றுக்கொடுப்பதில் புதிய அரசாங்கம் தற்போது முறைகேடாக நடக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. கடந்த அரசாங்கம்
வேலையில்லா பட்டதாரிகள் 20000 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனம் அளிப்பது தொடர்பில் அமைச்சரவையில தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் பாரபட்சமாக செயற்பட்டமை போன்று இந்த அரசும் ஈடுபடக்கூடாது.

நாடு பூராகவும் 54 ஆயிரத்திற்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் தற்போது இருக்கின்றனர். அவர்களுக்கு நியமனங்களை வழங்குமாறு கோரி கடந்த 2 வருடங்களுக்கு அதிகமாக போராட்டங்களை நடத்தி வருகின்றோம். அதன் விளைவாக 16800 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதாக கடந்த அரசாங்கம் அறிவித்ததுடன் அவர்களில் முதற்கட்டமாக 12133 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நியமனங்களின் போதும் பட்டதாரிகள் உள்வாரி வெளிவாரி என பிரிக்கப்பட்டமையினால் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இதன் போது அதிகளவில் உள்வாரிப்பட்டதாரிகளுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. பட்டதாரிகளை அவ்வாறு பாகுபடுத்தாமல் அனைவருக்கும் நியமனங்கள் முறையாக வழங்கப்பட்ட வேண்டும்.

ஆகவே இந்த நடவடிக்கைகள் உரிய வகையில் நடைபெறவேண்டும். என்பதுடன் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நாடுதழுவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்க விரும்புகின்றோம் என கூறினார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -