ஏ.எஸ்.எம்.ஜாவித்-
.சுமார் 15 வருடங்களுக்க முன்னர் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்தத்தின்போது நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கற்பனைக் கதையாக எடுக்கப்பட்ட சுனாமி படம் இன்று இலங்கையில் பல திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சுமார் 35000 பேர் மரணமடைந்தும் சுமார் 5000க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போனதுடன் கால்நடைகள், ஏனைய பல உயிரினங்கள் காவு கொள்ளப்பட்டதுடன் கோடிக்கணக்கான உடமைகளும் அழிவுகளுக்கு உள்ளானது. இவ்வாறான துன்பியல்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சுனாமி நினைவாக சுனாமி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படத்தின் ஆரம்ப வெளியீட்டு நிகழ்வு கடந்த 3ஆம் திகதி வெள்ளவத்தை சவோய் தியட்டரில் இடம் பெற்றது. ஊடகங்களில் படம்பற்றி தெளிவுபடுத்தும் நிகழ்வில் இலங்கையில் உள்ள பல ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் இதன்போது பெருமளவான கலைஞர்கள், கலை ஆர்வளர்கள், பொதுமக்களும் கண்டு களித்தனர். சுமார் 15 வருடங்களுக்குப்பின்னர்; தயாரிப்பாளர்கள், நடிகர்களின் அயராத பங்களிப்பு மற்றும் திறமை காரணமாக மிகவும் சிறந்த முறையில் இப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுகின்றமை முக்கிய அம்சமாகும்.
சோமரத்ன திசாநாயக்கவின் இயக்கத்தில் உருவான இப்படம் இன, மத பேதமின்றி தேவைக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற வகையில் மூன்று மொழிகளையும் உள்வாங்கிய விதத்தில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் நடிகர்களாக நிரஞ்சனி சண்முகராஜா, தர்சன் தர்மராஜ், ஹிமாலி சயுரங்கி, பிமல் ஜயகொடி, சிறுவர்களாக மெனாரா வீரதுங்க, ஸ்வேதகி, செனுல்யா தன்தநாராயண, பெர்னி விஜேகுமார் மற்றும் கிரிராஸ் சௌசல்யா, சிரேஸ்ட அறிவிப்பாளர் ஜே. யோகராஜ், அசோக சேரசிங்க, சுனெத் சாந்தபிரிய,சிந்தன குலதுங்க, அனுருத்திகா பாதுக்கசே, விஸ்வஜித் குணசேகர, லலித் ஜனகாந்த, குமார திரிமாதுர, ஜயந்த முனிதந்திரி, சத்யபிரியா ரட்ணசாமி, ரஞ்ஜனி ராஜ்மோகன், சரத் சந்திரசிறி, ஹிரான் கொஸ்தா, சம்பத் தென்னகோன், ரத்னா லாலனி, அருனி மென்டிஸ், குமார குலதுங்க, மைக்கல், சினெதி அகிலா, கௌமினி வர்ணா, சந்தமாலி ஹெவாநாயக்க, சுஜனி விதிரா, தெவ்லி செனேஹா, ஹேமானி பிரபாஸ்வரி, துசதமி சங்தினா, சுனெத்ரா கீதாஞ்சலி, நிலந்த விஸேசிங்க உள்ளிட்ட பலர் மிகவும் சிறப்பான முறையில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முக்கிய கதைச்சுருக்கம் சுனாமியின்போது தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு குடும்பங்களின் பெண் பிள்ளைகள் காணாமல்போய் அவர்கள் தமது பிள்ளைகளைத் தேடியலைந்து ஒரு பிள்ளை உயிர் தப்பி அப்பிள்ளை சிங்களக் குடும்பத்தில் வளர்கின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிர் தப்பிய பிள்ளை சிங்களக் குடும்பத்தில் வளர்ந்து வரும் நிலையில் அந்தப்பிள்ளையின் தமிழ் மொழி அறிவு பற்றியும் தமிழ் பேசுகின்றமை பற்றியும் “முன்ஜென்ம நினைவில் தமிழ் பேசுகின்ற சிங்களச் சிறுமி” என ஊடகவியலாளர் ஒருவரினால் பத்திரிகை ஒன்றில் படத்துடன் வெளியிடப்பட்ட செய்தியின் பயனாக அந்தப்பிள்ளையை அடையாலம் காணப்பட்டு அது நீதிமன்றம் வரை சென்று பின்னர் டி.என்.ஏ பரீட்சையின் போது அந்தப் பிள்ளை தமிழ் குடும்பத்தின் பிள்ளை என்ற வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டு படம் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஆரம்ப விழாவில் பல கலைஞர்கள், புத்தி ஜீவிகள், பொதுமக்கள், நடிகை நடிகர்கள் எனப் பெருமளவானவர்கள் கலந்து கண்டுகளித்து படம் சிறப்பாக இருப்பதாகவும், அணைவரும் இதனைக் கண்டுகளிக்க வேண்டும் படத்தின் சிறப்புப்பற்றி பலரும் நல்ல கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இப்படம் நாளை 26ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கையில் உள்ள பல திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.