முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன லங்கா ஹொஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையான லங்கா ஹொஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் முன்பிணை கோரியிருந்த நிலையில், சட்ட மாஅதிபரின் உத்தரவுக்கமைய நேற்று முன்தினம் (24) நீதிமன்றத்தினால் அவருக்கு பிடியாணை வழங்கப்பட்டிருந்தது.

ராஜித சேனாரத்னவின் கொழும்பு மற்றும் பேருவளையில் உள்ள வீடுகளுக்கு சென்று அவரைத் தேடி வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று (26) பிற்பகல் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து அவரது கொழும்பிலுள்ள வீட்டை சோதனையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று (26) இரவு 7.40 மணியளவில் நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இருதய அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அங்கு விஜயம் செய்துள்ள, குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

ராஜித சேனாரத்ன சார்பில் முன்பிணை கோரி திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட, மனுவை எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதி எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே கடந்த டிசம்பர் 23ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -