திருகோணமலை மாவட்டம் தோப்பூர் ஆஸாத் நகர் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் முதலாவது அல் ஹாபிழ், அல் ஆலிம் மற்றும் புஹாரி ஷரீப் ஆரம்ப நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது.
அரபுக் கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.முகைதீன் பாவா தலைமையில் (25) இடம் பெற்ற இப் பட்டமளிப்பு விழாவில் அல் ஆலிம் சான்றிதழ் 08 பேருக்கும், அல் ஹாபிழ் 04 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
இப்பட்டமளிப்புக்கு பிரதம அதிதியாக முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
குறித்த நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அல் முப்தி கே.எம்.எம்.ஜரீர் நூரி மற்றும் தோப்பூர் உலமா சபையினர்,பள்ளிவாயல் சம்மேளனங்களின் உறுப்பினர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.