கஹட்டோவிட்ட இமாம் ஷாபிஈ நிலையத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான சுற்றாடல் மற்றும் சுகாதார விழிப்புணர்வுக் கருத்தரங்கு




கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
ஹட்டோவிட்டவில் அமைந்திருக்கும் கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ நிலையத்தில் பாடசாலை மாணவர்களின் கணித பாட விருத்திக்கான ஐந்து நாள் நிகழ்ச்சித்திட்ட செயலமர்வு நடைபெற்று வருகிறது. இதன் வளவாளராக மருதமுனை ஸ்மார்ட் அகடமியினை சேர்ந்த ஆசிரியர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து சிறப்பித்து வருகிறார்.

செயலமர்வு தொடரின் அங்கமொன்றாக நேற்றைய தினம் (09) சுற்றாடல் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றும் இடம் பெற்றது.

அதில் அத்தனகல்ல SPHI ஆகிய எம்.பி.அஜித் குமார மற்றும் வதுபிட்டிவலை PHI ஆகிய பி.எஸ்.பி.எல்.உபசேன ஆகிய சுகாதார அதிகாரிகள் பங்குபற்றி சிறப்பித்தனர்.
பிரதமர் அலுவலக ஊடக அதிகாரியும், சியனே ஊடக வட்ட செயலாளருமான பவாஸ் அவர்கள் மொழிபெயர்ப்புச் செய்தார்.

பிரதேச சமூக சேவகர்களில் அலஹாஜ் பிர்தவுஸ் JP இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -