அரச உத்தியோகஸ்த்தர்களின் அசமந்த போக்கினால் வேலைகள் பாதிப்பு-ராம்

ராமச்சந்திரன் -

 எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கு அத்திவாரமாக சிறுவர் முன்பள்ளிகள் விளங்குவதாக தெரிவித்த நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் அரச உத்தியோகஸ்தர்களின் அசமந்த போக்கினாலே லெதண்டி தோட்டத்தில் புதிதாக அமையவிருந்த சிறுவர் முன்பள்ளி கட்டிடம் தடைபட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

லெதண்டி, பிரிடோ சரஸ்வதி முன்பள்ளி’ யின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக்க் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

லெதண்டி தோட்ட கலாசார நிலையத்தில் 14/12 இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரிடோ முன்பள்ளி பிராந்திய இணைப்பாளர்,ஆசிரியர்களான மல்லிகா சிவசேகரம், மனோராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

சிறுவர் முன்பள்ளி என்பது கல்வியை கற்றுக்கொடுக்கும் இடம் என்பதைவிட எதிர்காலத்தில் சிறந்ததோர் சந்ததியை உருவாக்கும் ஆரம்ப இடமாகும் . இங்கு மேடையேறிய மாணவ சிறார்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை எம்முன் அடையாளப்படுத்தியது இந்த முன்பள்ளி ஆசிரியர். அவ்வாறானவர்கள் பாராட்டப்பவேண்டியதுடன் அவர்கள் நன்றிக்குறியவர்களுமாவார்.

பிரிடோ நிறுவனத்தினூடாக மலையகத்தில் கணிசமான அளவில் தோட்டங்கள் தோறும் முன்பள்ளிகளை நடாத்தப்பட்டு வருகின்றது. இந் நிலை மலையக கல்வி விருத்தியில் பெரும் பங்களிப்பாக இருக்கின்றது. இதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .
லெதண்டி தோட்டத்தில் இயங்கிய லெதண்டி தமிழ் வித்தியாலயம் எம் முன்னோரின் அக்கறை இன்மையால் வேறு பிரதேசத்திற்குகொண்டு செல்லப்பட்டுள்ளது. 

அரச பாடசாலையான இந்த பாடசாலை இதே தோட்டத்தில் இருந்திருந்தால் இன்றுநாம் நூற்றாண்டையும் கொண்டாடியிருக்கலாம். எமது பிள்ளைகளும் வெளியிடங்களுக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது .
எமது சொத்தையும் வளத்தையும் விட்டுக்கொடுக்காது பாதுகாப்பதும் எம் ஒவ்வொறுவரின் பொறுப்பாகும்.

நான் பிரதேச சபை உறுப்பினரானதும் எனது எண்ணத்தில் எழுந்தது லெதண்டி தமிழ் வித்தியாலயம் இருந்த அதே இடத்தில் கல்விக்கூடமொன்றை அமைக்க வேண்டுமென்றும் எண்ணினேன் . அவ்வாறே அந்த இடத்தில் முன்பள்ளி கட்டிடத்தை கட்ட கட்டுவதற்கு நிதியொதுக்கீட்டினையும் பெற்று வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தயாரானேன் இருந்தும் அரச உத்தியோகஸ்த்தர்களின் அசமந்த போக்கினால் அந்த வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது .

எனினும், நான் மனம் தளரவில்லை. உங்களின் ஒத்துழைப்போடு விரைவில் அத்திட்டத்தை முன்னெடுத்து அடுத்த வருட பரிசளிப்பு விழாவை புதிய முன்பள்ளி கட்டிடத்தில் நிகழ்த்த நாம் திடசங்கட்பம் பூணுவோம் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -