கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக கல்முனையன்ஸ் போரமினால் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்த தான முகாம் நான்காவது ஆண்டாக இவ்வாண்டும் இடம்பெற்றது
இதற்கமைய (28)சனிக்கிழமை கல்முனை அலியார் வீதியில் அமைந்துள்ள அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இரத்த தான முகாம் இடம்பெற்றது.இதில்154 பேர் கலந்து கொண்டு குருதி நன்கொடை வழங்கினர்.
இது தொடர்பாக கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்ச்சகர் ஏ.எல்.எப் ரகுமான் கருத்து தெரிவிக்கையில் எமது வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக கடந்த மூன்று வருடங்களாகவும் இம் முறையும் நான்காவது வருடமாக இவ் அமைப்பினர் எமது வைத்தியசாலைக்கு குருதி நன்கொடை வழங்குகின்றனர் .இவ் அமைப்பினருக்கும், எமது வைத்தியசாலையின் சார்பாக அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.