சிறந்த சர்வதேச அமைப்பு விருது பெற்றது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்



குவைத் நாட்டில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக குவைத் வாழ் தமிழ் மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் மக்களுக்கு கல்வி, சமயம், மொழி, சமூகம், வேலை வாய்ப்பு, பொது நலன், ஆரோக்கியம், தேசியம், ஒருமைப்பாடு, விளையாட்டு போன்ற தளங்களில் பல்வேறு சேவைகளை சிறப்பாக செய்துக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு அதன் பொதுச் சேவைகளை அங்கீகரித்து *சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் (The Universal Tamil University)* தனது 39வது பட்டமளிப்பு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் *சர்வதேச இளைஞர் பிரதிநிதித்துவ விருது - 2019 (International Youth Icon Award - 2019)* பிரிவில் *சிறந்த சர்வதேச அமைப்பு விருது (International Excellence Organization Award)* வழங்கி சிறப்பு சேர்த்தது.

சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடும் தன்னார்வளர்களை சிறப்பிக்கும் வகையில் சமூக சேவகர்களை வாழ்த்தி பெருமைபடுத்தி பல்வேறு சாதனையாளர்களுக்கு விருதுகளை கடந்த 21.12.2019 அன்று மதுரை, மாட்டுத்தாவணி அருகில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் வழங்கியது. *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் எஸ். முஹம்மது அப்பாஸ்* விருதைப் பெற்றுக் கொண்டார். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

இவ்விருதை வழங்கிய *சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம், சர்வதேச இளைஞர் உரிமைகள் கழகம், மதுரை முத்தமிழ் நிகழ்த்துக் கலையகம்* மற்றும் *நியூஸ் தமிழ்* நிர்வாகிகளுக்கும், இதை பெறுவதற்கு காரணமாக திகழும் சங்கத்தின் சேவைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -