சுவிஸ் தூதரக பெண் ஊழியர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு வெளிவிவகார திணைக்களம் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியைத் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவது தாம் கண்டிக்கத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது நாட்டின் நீதி மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைய, குறித்த அதிகாரியின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அதனை உறுதி செய்வது இந்நாட்டு நீதிமன்றத்தின் பொறுப்பாகும்.
குறித்த தூதரக அதிகாரி சார்பில் சுவிஸ் தூதரகம் தொடர்ந்தும் முன்னிற்கும். அவருக்காக முடிந்தவரை அனைத்து நடவடிக்கைகளையும் சுவிஸ் தூதரகம் முன்னெடுக்கும்.
இலங்கை ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் நாடு என நற்பெயரைக் கொண்டுள்ள இந்தத் தருணத்தில், தூதரக அதிகாரியின் உடல் நல பாதிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினை குறித்து மத்தியஸ்த மற்றும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை சுவிஸ் தூதரகம் எதிர்ப்பார்க்கின்றது.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் திங்கட்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நேரில் சந்தித்து தூதரக அதிகாரியின் விடயம் குறித்து பேசியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.