நோர்ட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்ட்டன் கிரிவன்எலிய பகுதியில் கூரைத்தகடுகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக டிரக் வண்டியொன்று இன்று (24) காலை 9.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில் அதனை செலுத்தி சென்ற சாரதிகடும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கினிகத்தேனை பகுதியிலிருந்து லக்கம் பகுதியினை நோக்கி கூரைத்தகடுகளை ஏற்றிச் சென்ற வண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் டிரக் வண்டி தலைகீழாக கவிழ்ந்துள்ளதுடன் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.
குறித்த விபத்து சாரதிக்கு வாகனத்தினை கட்டுபடுத்த முடியாமல் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்ட்டன் பிரிஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.