சிலோன் மீடியா போரத்தின் “குட்பாய் - 2019, ஹலோ 2020” வர்ண இரவு நிகழ்வு (Goodbye - 2019, Hello 2020! Colors Night) சனிக்கிழமை (28) சாய்ந்தமருது-மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றோசன் அக்தர், ஏ.சீ.எம்.சத்தார், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.நவாஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோய் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் என்.ஆரிப், சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் முகாமைததுவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.முபாறக், சாய்ந்தமருது டவுன் ட்ரவல்ஸ் அன்ட் டுவர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஜெலீல், ஐக்கிய வர்த்தக நிறுவனத்தின் பணிப்பாளர்களான எம்.சமீம், ஏ.எம்.அஸீம், எம்.எம்.அஸீஸ், இப்றா அரிசி ஆலை உரிமையாளரும், கல்முனை நற்பணி மன்றத்தின் தலைவருமான அல்-ஹாஜ் எஸ்.எல்.அமீர், தழிழர் ஊடக அமைப்பின் தலைவர் தர்மேந்திரன், அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர், கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஏ.எம்.றியாஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளர் எம்.ஜமால், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், நிதி உதவியாளர் ஏ.சீ.முஹம்மட், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.றசீட் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், திணைக்ளத் தலைவர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முன்னிலைப் பேச்சாளராக தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் கலந்து கொண்டு 'சமகால ஊடக அரசியலில் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் வகிபாகம்' எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கலை, கலாச்சார நிகழ்வுகள், நகைச்சுவை, ஓரங்க நாடகம், கவியரங்கு, விவாத Nடை போன்ற பல்வேறு சுவார்சியமான நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது சிலோன் மீடியா போரத்தின் அங்கத்தவர்களுக்கு புத்தாண்டுப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் போரத்தின் மீடியா விபரத்கொத்தும் வெளியிட்டு வைக்கப்பட்டது.