ஐக்கிய தேசிய கட்சி ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு - இல்லையேல் தோல்வி நிச்சயம் - முன்னாள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு


க.கிஷாந்தன்-

ஐக்கிய தேசிய கட்சி ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்பது போல ஐக்கிய தேசிய கட்சிக்குள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சி பொது தேர்தலில் வெற்றிப்பெற வாய்ப்புகள் உள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எல்லோரும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இப்போது இருக்கின்றன. அனால் எந்த வகையிலாவது சிலர் இதனை குழப்ப நினைத்தால் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் ஒரு பின்னடைவுக்கு செல்லும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடும் இல்லை.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் விடுக்கொடுப்புகள் இடம்பெற்றால் ஐக்கிய தேசிய கட்சி ஒரு பலமான கட்சியாக செயற்படும்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைதானது அரசியல் பழிவாங்கலாக காணப்படுகின்றது. ஆரம்பத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியிருந்தார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எந்தவிதமான அரசியல் பழிவாங்கலும் இடம்பெறாது என்று.
ஆனால் இப்பொழுது பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைது வெறும் போக்குவரத்து பிரச்சினைக்கு மட்டும் தான். ஆகையால் இவ்வாறான பாரதூரமாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தமை எந்த அளவிறிகு இந்த நாட்டினுடைய அரசியலிலேயே அழுத்தை கொடுக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
கடந்த கால அரசாங்கத்தின் பொழுது இவ்வாறான சிறு சிறு பிரச்சினைகளுக்காகவும், போக்குவரத்து விதிக்காகவும் கைது செய்யப்பட்டவில்லை. பல ஊழல்கள் தொடர்பான அரசியல் நிகழ்வுகள் தான் இடம்பெற்றது. அதனால தான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைதானது ஒரு ஊழலுக்காக அல்ல. வெறுமனே போக்குவரத்து பிரச்சினைக்காக மட்டும் தான் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -