சிலோன் மீடியா போரத்தின் 'Goodbye - 2019, Hello 2020 வர்ண இரவு நிகழ்வு

பாறுக் ஷிஹான்-
சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் 'குட்பாய் - 2019, ஹலோ 2020! வர்ண இரவு நிகழ்வு (Goodbye - 2019, Hello 2020! Colors Night) சனிக்கிழமை(28) இரவு 8.00 மணிக்கு சாய்ந்தமருது-மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன்
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,அரச உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள்,தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள், கவிஞர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முன்னிலைப் பேச்சாளராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் கலந்து கொண்டு 'சமகால ஊடக அரசியலில் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் வகிபாகம்' எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கலை, கலாச்சார நிகழ்வுகள்,நகைச்சுவை, ஓரங்க நாடகம், கவியரங்கு, விவாத மேடை,இஸ்லாமியக் கீதம் போன்ற பல்வேறு சுவார்சியமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சிலோன் மீடியா போரத்தின் அங்கத்தவர்களுக்கு புத்தாண்டுப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் போரத்தின் மீடியா விபரத்கொத்தும் வெளியிடப்பட்டது.
இதில் போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூறுல் ஹூதா உமர், உப தலைவர் எஸ்.அஷ்ரப்கான் பிரதி தேசிய அமைப்பாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், உப செயலாளர் எம்.எம்.ஜபீர், செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.றின்ஸான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.














எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -